பிறருடைய கவிதைகளுக்கு காரணமாக இருக்க நான் விரும்பவில்லை,
ஆனால்,
என்னுடைய கவிதைகளுக்கு அவள் மட்டுமே காரணமாக இருக்க விரும்புகிறேன்!!
Tuesday, November 1, 2011
Thursday, October 13, 2011
இரவுக்கவிதை
மென்மையான அவள் கண்களுக்கு என் நெஞ்சை ஊடுருவும் வலிமை எவ்வாறு வாய்த்ததோ; நயன மொழியினும் இனிய மொழி இவ்வுலகில் இல்லையென்றே தோன்றுகிறது, அவள் உதடுகளிலிருந்து வருவது தேவமொழியாக இருக்குமோ, ஏனோ அது என் செவிகளில் விழுவது இல்லை; தாயின் மடியில் உறங்கும் குழந்தைக்கு அவள் தாலாட்டு சத்தமாக தோன்றுவது இல்லை, அவள் கூந்தல் அலைபாயும்போது என் மனதும் துள்ளும் அதிசயம் ஏனோ; இல்லை இது அதிசயமாக இருக்க சாத்தியமில்லை, வண்ணத்து பூச்சிக்கு பூக்கள் பிடிக்கவில்லை என்றால்தான் அதிசயம், அவள் கண்களுக்குள் உறங்கவும் கைகளுக்குள் இறக்கவும் ஏங்கும் நெஞ்சம்.
Sunday, October 9, 2011
இரவுக்கவிதை
கண்கள் பேசிடும் பலநூறு வார்த்தைகள்,
புன்னகை சிந்திடும் கவிதைகள் ஆயிரம்,
வாய்மொழி தீட்டிடும் பல லட்சம் காவியம்,
அவள் என்னை தீண்டயில் பாய்ந்திடும் மின்சாரம்,
என் மனம் புரியாதோ தமிழ்மகள் அவளுக்கு,
ஒரு வார்த்தை நீ சொன்னால் நின்றிடுமே என் கிறுக்கல்!!!
Sunday, July 3, 2011
Friday, June 24, 2011
கொலை
தன்னை தானே மாய்த்துக்கொள்வது தற்கொலை,
காதலும் ஒருவகை தற்கொலை தான்!
ஆனால் என்ன ஒரு வேற்றுமை,
முதலாவது வெறுப்பில் பின்னது விருப்பில்!!!
Monday, March 7, 2011
வாழ்க்கை
ஒரு நாள் நீ என்னிடம் கேட்பாய்
எது உனக்கு முக்கியம் நானா (இல்லை) உன் வாழ்க்கையா?
நான் சொல்வேன், எனது வாழ்க்கை
நீ என்னிடமிருந்து விலகிச்செல்வாய் " நீதான் என் வாழ்க்கை" என்பதை அறியாது!
எது உனக்கு முக்கியம் நானா (இல்லை) உன் வாழ்க்கையா?
நான் சொல்வேன், எனது வாழ்க்கை
நீ என்னிடமிருந்து விலகிச்செல்வாய் " நீதான் என் வாழ்க்கை" என்பதை அறியாது!
Friday, March 4, 2011
நிலவே !!!
சிறு வயதில் தாய்மடியில் நான் பசியாறினேன் !! உன்னைக்கண்டு ..
பள்ளி நாட்களில் அறிவியல் கண்களால் உன்னை ரசித்தேன் !!!
பதின் நினைவுகளில் நான் இருக்க, நீயோ அழகாகத் தெரிந்தாய் !!!!
அமாவாசைகளை நான் வெறுத்தேன்.. பிரிவின் தாக்கம் !!!
காத்திருந்தேன் பாதித் திங்கள் ... முழுதாய் உனைக் காண ஏக்கம் !!!
என் துக்கம் களையும், பின்னிரவுகளின் உன் வெளிச்சம்..
என்னவளை நினைத்தேன் .. உன்னுள் அவள் முகம் . பரவசம்!!
தென்றல் உன்னை அழகு படுத்தும் இக்கணத்தில் இழந்தேன் என்னை..
தூக்கம் வராமல் கனவுகளில் வாழும் மாயம்.. கற்பித்தாய் நீ!!!
தோற்றுப்போகிறேன்.. உன் அழகை விவரிக்க முயலும் பொழுது ..
கண்ணாமூச்சி ஆடும் மேகங்களால் கூட உன்னை தொட முடியவில்லையாம் . அழுகைக்கு தயாராகின்றன .. மழைகாற்று..நம்மை பிரிக்கும் சதியோ?? !!!
மழையிலும் கரையாத உன்னை, பொறாமையோடு பார்கின்றன நட்சத்திரங்கள்...
கவலைகளால் துவண்டு விட்டிருந்த என்னை, கவிஞானாக்கி அழகு பார்த்தாய்...
என்னவள் எனை நீங்கினாலும், உன் கனிவு முகம் என்னை கலங்க விட வில்லை ...
நமக்குள் இருக்கும் தூரம் .. வெறும் கண்களுக்கும் நெஞ்சுக்கும் உள்ள தொலைவு தான் ..!!!
பிரிந்தாலும் பதினைந்து நாட்களில் என்னை சேரும் உன் அன்பினை எண்ணி வியப்பில் நான் !!!
நிலவே!!! என் கவலைகளின் மருந்தாகிவிட்ட உன்னை நிரந்தரமாக அடையும் நாள் என்றோ ???!!
Thursday, February 24, 2011
மூடப்பெண்
மூடப்பெண்,
அவள் காலடித்தடத்தை முத்தமிட்டேன் என்பதை அறியாது
கூறுகிறாள், "ஆண்ட்டி, பிரபு மண்ணு தின்கிறான்" !!!
தோல்வி
தோல்வி எனக்கு புதிதல்ல,
அதனால்தான் என்னவளை மறக்கவேண்டும் என நினைக்கும்போது கூட,
என் மனதோடு போராடி தோற்றுப்போகிறேன்...
அதனால்தான் என்னவளை மறக்கவேண்டும் என நினைக்கும்போது கூட,
என் மனதோடு போராடி தோற்றுப்போகிறேன்...
Tuesday, February 22, 2011
Monday, February 21, 2011
பாசம்
அன்று நான் என் காதலியின் பெயரை பச்சை குத்திய தடயத்தை தடவிப்பார்த்து ,
இன்று என் மகள் கேட்க்கிறாள்...
?
?
?
" என் மீது அவ்வளவு பாசமா அப்பா...?"
இன்று என் மகள் கேட்க்கிறாள்...
?
?
?
" என் மீது அவ்வளவு பாசமா அப்பா...?"
தாங்கமாட்டாய்!!!
தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!
இதயத்தின் நான்கு அறைகளிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.
கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!
கயிறு
நீண்டு விட்ட என் பின்னிரவுகளின் நினைவலைகளை கோர்க்கும் முயற்சியில் நான் .........
அம்மா,
அறுத்தால் பிறக்கும் புதிய உறவு தந்தது ... உன் தொப்புள் கொடி!!
விட்டத்தில் இருந்து என்னை விடாது தாலாட்டியது உன் புடவை ... தூலி முடிசுகள் !!!
மார்பின் குறுக்கே மரபுகள் காத்து ஒழுக்கம் பயில என் பூணூல் ...
கோபம் காமம் தவிர்த்து விட என் கழுத்தின் உருத்ராட்சமும் கூட .. நீ கோர்த்தது தான் ....
கயிறு போல என்னுள் பிணைந்து போன உன் அன்பினை விவரிக்க முடியா இயலாமையில்
வார்த்தைகளின் வறட்சி கண்டு விக்கித்து போகிறேன் !!!!!!
அம்மா,
அறுத்தால் பிறக்கும் புதிய உறவு தந்தது ... உன் தொப்புள் கொடி!!
விட்டத்தில் இருந்து என்னை விடாது தாலாட்டியது உன் புடவை ... தூலி முடிசுகள் !!!
மார்பின் குறுக்கே மரபுகள் காத்து ஒழுக்கம் பயில என் பூணூல் ...
கோபம் காமம் தவிர்த்து விட என் கழுத்தின் உருத்ராட்சமும் கூட .. நீ கோர்த்தது தான் ....
கயிறு போல என்னுள் பிணைந்து போன உன் அன்பினை விவரிக்க முடியா இயலாமையில்
வார்த்தைகளின் வறட்சி கண்டு விக்கித்து போகிறேன் !!!!!!
Subscribe to:
Posts (Atom)