Tuesday, August 6, 2013

அடக்க முடியா ஆற்றாமை !!!!!!

வானுயர பரந்த பறவை , அது எமனின் எச்சம் கலந்த கலவை ..
பெண்ணொருத்தி சுமந்தாள்  கருவை ; சந்ததியும் காணவில்லை விடிவை !!!

அழிக்கும் வேலை கூட இயற்கையிடம் இல்லையெனில், அழும் வேலையே மிஞ்சும் நமக்கு !!
அறிவியல் கொண்டு அழிவை காண விழைந்த மனிதா , நெஞ்சினில் ஈரம் எதற்கு ?

ஆதியில் படித்த அணுக்கள்  பாடம்; அச்சாணியாய் அடிமனதில் ஓடம்
சந்ததிக்கும் ஊனமேனும் பரிசாம் ; காலனுக்கிங்கே விஞ்ஞானி வேடம்

பருந்து கூட சில பாம்புகளோடு பசியாறி நிறைவு பெறும் உலகத்தில்
உயிர்ப்பசி கொண்ட அலுமினிய பறவைக்கோ எவ்வளவு தீனி??

விடையில்லா விடுகதை இல்லை; காரணமில்லா காரியம் இல்லை
போரென்றும்  முடிவில்லை; இதைவிட அழிவுக்கு  சிறந்த பாதையில்லை;

உணர்த்து கொள் மனிதா , உன் சந்ததியும் எதிர் காலம் காண வேண்டாமோ ??
நீ சிந்திய அணுக்கழிவு நாளை உன் பிள்ளை உண்ணபோகும் உணவு!!

வீறு கொண்டு விழிதெழுந்திட புவி முழுதுமில்லை ஜப்பானிய குதிரைகள் !
எச்சரிக்கை !! நாம் , இன்னொரு ஹிரோஷிமா காண திராணி இல்லா மனிதர்கள்

குழந்தை அழும் பொழுதில் பெற்றவளும் அழாதிருக்க
உருவாக்க முனைந்திடு !! அழிவு இழைக்கா அணுசக்தி

உலக வல்லரசுகளே !! வலிமையை அணுக்களிடமா சோதிக்க வேண்டும் ??
குழந்தை மனம் , ரோஜா இதழையோத்த மென்மை கொண்டது , நம் உலகம்!!

                                                                                                               வைபவ் ஸ்ரீனிவாசன்