Thursday, February 24, 2011

மூடப்பெண்


மூடப்பெண்,
அவள் காலடித்தடத்தை முத்தமிட்டேன் என்பதை அறியாது
கூறுகிறாள், "ஆண்ட்டி, பிரபு மண்ணு தின்கிறான்" !!!

தோல்வி

தோல்வி எனக்கு புதிதல்ல,
அதனால்தான் என்னவளை மறக்கவேண்டும் என நினைக்கும்போது கூட,
என் மனதோடு போராடி தோற்றுப்போகிறேன்...

Tuesday, February 22, 2011

ஈரம்!

கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வருகிறாள்......ஆனாலும்
...
...
...
ஈரம் இல்லை அவள் மனதில்.

Monday, February 21, 2011

பாசம்

அன்று நான் என் காதலியின் பெயரை பச்சை குத்திய தடயத்தை தடவிப்பார்த்து ,
இன்று என் மகள் கேட்க்கிறாள்...
?
?
?
" என் மீது அவ்வளவு பாசமா அப்பா...?"

தாங்கமாட்டாய்!!!

தனிமையான சில கணங்களில்
இதயத்தின் நான்கு அறைகளிலும்
சூழ்ந்து கொள்ளும் வெறுமையின் கனம்
தாங்க முடியாததாய் இருக்கிறது.

கனவுகளைத் தேடி
உறக்கத்துக்கு ஓடிய விழிகளும் கூட
இப்போதெல்லாம்
வெறும் நினைவுகளை சுமந்தபடி
விழித்திருப்…
.
.
.
.
.
.
.
.
.
இப்படித்தான்…
முழுக்கவிதையும்
வாசிக்க நேர்ந்தால்,
என் துயர் தாங்க மாட்டாயென
பாதியிலேயே கைவிடப்படுகின்றன…
என் பல கவிதைகள்!

கயிறு

நீண்டு விட்ட என் பின்னிரவுகளின் நினைவலைகளை கோர்க்கும் முயற்சியில் நான் .........

அம்மா,

அறுத்தால் பிறக்கும் புதிய உறவு தந்தது ... உன் தொப்புள் கொடி!!







விட்டத்தில் இருந்து என்னை விடாது தாலாட்டியது உன் புடவை ... தூலி முடிசுகள் !!!

மார்பின் குறுக்கே மரபுகள் காத்து ஒழுக்கம் பயில என் பூணூல் ...

கோபம் காமம் தவிர்த்து விட என் கழுத்தின் உருத்ராட்சமும் கூட .. நீ கோர்த்தது   தான் ....


கயிறு  போல என்னுள் பிணைந்து போன உன் அன்பினை  விவரிக்க முடியா இயலாமையில்
வார்த்தைகளின் வறட்சி கண்டு விக்கித்து போகிறேன் !!!!!!