Tuesday, August 6, 2013

அடக்க முடியா ஆற்றாமை !!!!!!

வானுயர பரந்த பறவை , அது எமனின் எச்சம் கலந்த கலவை ..
பெண்ணொருத்தி சுமந்தாள்  கருவை ; சந்ததியும் காணவில்லை விடிவை !!!

அழிக்கும் வேலை கூட இயற்கையிடம் இல்லையெனில், அழும் வேலையே மிஞ்சும் நமக்கு !!
அறிவியல் கொண்டு அழிவை காண விழைந்த மனிதா , நெஞ்சினில் ஈரம் எதற்கு ?

ஆதியில் படித்த அணுக்கள்  பாடம்; அச்சாணியாய் அடிமனதில் ஓடம்
சந்ததிக்கும் ஊனமேனும் பரிசாம் ; காலனுக்கிங்கே விஞ்ஞானி வேடம்

பருந்து கூட சில பாம்புகளோடு பசியாறி நிறைவு பெறும் உலகத்தில்
உயிர்ப்பசி கொண்ட அலுமினிய பறவைக்கோ எவ்வளவு தீனி??

விடையில்லா விடுகதை இல்லை; காரணமில்லா காரியம் இல்லை
போரென்றும்  முடிவில்லை; இதைவிட அழிவுக்கு  சிறந்த பாதையில்லை;

உணர்த்து கொள் மனிதா , உன் சந்ததியும் எதிர் காலம் காண வேண்டாமோ ??
நீ சிந்திய அணுக்கழிவு நாளை உன் பிள்ளை உண்ணபோகும் உணவு!!

வீறு கொண்டு விழிதெழுந்திட புவி முழுதுமில்லை ஜப்பானிய குதிரைகள் !
எச்சரிக்கை !! நாம் , இன்னொரு ஹிரோஷிமா காண திராணி இல்லா மனிதர்கள்

குழந்தை அழும் பொழுதில் பெற்றவளும் அழாதிருக்க
உருவாக்க முனைந்திடு !! அழிவு இழைக்கா அணுசக்தி

உலக வல்லரசுகளே !! வலிமையை அணுக்களிடமா சோதிக்க வேண்டும் ??
குழந்தை மனம் , ரோஜா இதழையோத்த மென்மை கொண்டது , நம் உலகம்!!

                                                                                                               வைபவ் ஸ்ரீனிவாசன்


Tuesday, June 4, 2013

பின்னிரவின் பிரிவு!!!!

கார் கூட கண்டிராத குளிர் என்னகதுள்ளே..
இசை கேட்டறியும் செவி கூட செத்துவிட்டதோ; மாயை !!!
மின்விசிறி அளவாய் அலறியும்.. தனிமை மொத்தமாய் எனை தின்னும் கூட திகட்டவில்லை !!
விடியலை நோக்கி விரையும் இரவை வெறுமையுடன் நோக்கும் இக்கணம் ...

இரவுகளின் கருமைக்குள் எனை தொலைத்து தேடுகிறேன்!! 




பின்னிரவு பின்னல்களிடயே !!!!.
 
 

Monday, May 27, 2013

என்னவளே!!!!......................




 `                                                              கயிறு 

உனை நினைத்து உருகினேன்.! உள்ளே உனை வளர்த்தேன்.. காதல் என்ன கயிறுகளின் தொகுப்பா... நம்மை ஒன்றாய் கட்டி போட்டு விடுகிறதே!


                                                           தீவிரவாதி

உன்னிடம் பேசும் பொழுது மட்டும் வார்த்தைகள் எனை வெல்கின்றன.. நான் பேச நினைப்பதெல்லாம் உன் கண்களால் பேசிவிட்டு ஊமை போல என்னுள் ஊடுருவி விட்டாய், என் செல்ல தீவிரவாதி!!!



                                                  மழை

உன் கண்களை பார்க்க முடியாமல் தானோ என்னவோ இன்று மேகங்கள் அழுகிறதோ??. நீ உறங்கியவுடன் மழை!..





Tuesday, November 1, 2011

கவித கவித...

பிறருடைய கவிதைகளுக்கு காரணமாக இருக்க நான் விரும்பவில்லை,
ஆனால்,
என்னுடைய கவிதைகளுக்கு அவள் மட்டுமே காரணமாக இருக்க விரும்புகிறேன்!!

Thursday, October 13, 2011

இரவுக்கவிதை

மென்மையான அவள் கண்களுக்கு என் நெஞ்சை 
ஊடுருவும் வலிமை எவ்வாறு வாய்த்ததோ;


நயன மொழியினும் இனிய மொழி
 இவ்வுலகில் இல்லையென்றே தோன்றுகிறது,


அவள் உதடுகளிலிருந்து வருவது தேவமொழியாக 
இருக்குமோ, 
ஏனோ அது என் செவிகளில் விழுவது இல்லை;


 தாயின் மடியில் உறங்கும் குழந்தைக்கு அவள் 
தாலாட்டு சத்தமாக தோன்றுவது இல்லை,


அவள் கூந்தல் அலைபாயும்போது 
என் மனதும் துள்ளும் அதிசயம் ஏனோ;


இல்லை இது அதிசயமாக இருக்க சாத்தியமில்லை, 
வண்ணத்து பூச்சிக்கு பூக்கள் பிடிக்கவில்லை
 என்றால்தான் அதிசயம்,


அவள் கண்களுக்குள் உறங்கவும் 
கைகளுக்குள் இறக்கவும் ஏங்கும் நெஞ்சம்.

Sunday, October 9, 2011

இரவுக்கவிதை




கண்கள் பேசிடும் பலநூறு வார்த்தைகள்,
புன்னகை சிந்திடும் கவிதைகள் ஆயிரம்,
வாய்மொழி தீட்டிடும் பல லட்சம் காவியம்,
அவள் என்னை தீண்டயில் பாய்ந்திடும் மின்சாரம்,
என் மனம் புரியாதோ தமிழ்மகள் அவளுக்கு,
ஒரு வார்த்தை நீ சொன்னால் நின்றிடுமே என் கிறுக்கல்!!!

Sunday, July 3, 2011

தேவதைகள் வேடம்!!!


உன் முகத்திரை கிடைத்தால் போதும்...
ராட்சசியும் தேவதை ஆகிறாள் !!!