Thursday, October 13, 2011

இரவுக்கவிதை

மென்மையான அவள் கண்களுக்கு என் நெஞ்சை 
ஊடுருவும் வலிமை எவ்வாறு வாய்த்ததோ;


நயன மொழியினும் இனிய மொழி
 இவ்வுலகில் இல்லையென்றே தோன்றுகிறது,


அவள் உதடுகளிலிருந்து வருவது தேவமொழியாக 
இருக்குமோ, 
ஏனோ அது என் செவிகளில் விழுவது இல்லை;


 தாயின் மடியில் உறங்கும் குழந்தைக்கு அவள் 
தாலாட்டு சத்தமாக தோன்றுவது இல்லை,


அவள் கூந்தல் அலைபாயும்போது 
என் மனதும் துள்ளும் அதிசயம் ஏனோ;


இல்லை இது அதிசயமாக இருக்க சாத்தியமில்லை, 
வண்ணத்து பூச்சிக்கு பூக்கள் பிடிக்கவில்லை
 என்றால்தான் அதிசயம்,


அவள் கண்களுக்குள் உறங்கவும் 
கைகளுக்குள் இறக்கவும் ஏங்கும் நெஞ்சம்.

No comments:

Post a Comment