Monday, February 21, 2011

கயிறு

நீண்டு விட்ட என் பின்னிரவுகளின் நினைவலைகளை கோர்க்கும் முயற்சியில் நான் .........

அம்மா,

அறுத்தால் பிறக்கும் புதிய உறவு தந்தது ... உன் தொப்புள் கொடி!!







விட்டத்தில் இருந்து என்னை விடாது தாலாட்டியது உன் புடவை ... தூலி முடிசுகள் !!!

மார்பின் குறுக்கே மரபுகள் காத்து ஒழுக்கம் பயில என் பூணூல் ...

கோபம் காமம் தவிர்த்து விட என் கழுத்தின் உருத்ராட்சமும் கூட .. நீ கோர்த்தது   தான் ....


கயிறு  போல என்னுள் பிணைந்து போன உன் அன்பினை  விவரிக்க முடியா இயலாமையில்
வார்த்தைகளின் வறட்சி கண்டு விக்கித்து போகிறேன் !!!!!! 


14 comments:

  1. முதலில் நன்றி
    பிறகு நன்று :-)
    அதுவும் தாய் சேய் உறவு -கயிறு ,நல்ல ஒப்பிடுதல்.. ஆனால் வரிகளை சற்று சுருக்கிக்கொள்ளலாம் ஹைக்கூவாக அல்ல கவிதையாகவே,என் கருத்து. :-) தொடர்ந்து இது போன்ற அழகிய பதிவுகளை தர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Aishwarya,
    கவிதையின் இலக்கணத்தை விட உணர்சிகளுக்கு இடம் கொடுத்ததன் விளைவு :( !!! நன்றி !!! :)

    ReplyDelete
  3. real ah gethu:)
    expecting more such kavidhai's:)
    punal la pathi ezhudina vari is nice da:)

    ReplyDelete
  4. தமது முதல் பதிப்பிலேயே தாய்மையின் அரவணைப்பைவிட சிறந்தது ஏதுமில்லை என்பதை உணர்த்திய ஆருயிர் நண்பனுக்கு எனது வாழ்த்துக்கள்!!!
    நம் பணி தொடரும்!!!

    ReplyDelete
  5. உணர்வுகளை வார்த்தைகளில் கோர்த்து,
    அதை வலைகோப்பில் வலம் விட்டது நன்று...
    தொடரட்டும் உன் கவிதை பின்னல்கள் வலையில்..... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. **மார்பின் குறுக்கே மரபுகள் காத்து ஒழுக்கம் பயில என் பூணூல் ** vaasikka vaasikka enaku inspiration unga poems :) awesome lines :)

    ReplyDelete