Friday, March 4, 2011

நிலவே !!!


சிறு வயதில் தாய்மடியில் நான் பசியாறினேன் !! உன்னைக்கண்டு ..
பள்ளி நாட்களில் அறிவியல் கண்களால் உன்னை ரசித்தேன் !!!
பதின் நினைவுகளில் நான் இருக்க, நீயோ அழகாகத்  தெரிந்தாய் !!!!
அமாவாசைகளை நான் வெறுத்தேன்.. பிரிவின் தாக்கம் !!!
காத்திருந்தேன் பாதித் திங்கள் ... முழுதாய் உனைக்  காண ஏக்கம் !!!
என் துக்கம் களையும், பின்னிரவுகளின் உன் வெளிச்சம்..
என்னவளை நினைத்தேன் .. உன்னுள் அவள் முகம் . பரவசம்!!
தென்றல் உன்னை அழகு படுத்தும் இக்கணத்தில் இழந்தேன் என்னை..
தூக்கம் வராமல் கனவுகளில் வாழும் மாயம்.. கற்பித்தாய் நீ!!!
தோற்றுப்போகிறேன்.. உன் அழகை விவரிக்க முயலும் பொழுது ..
கண்ணாமூச்சி ஆடும் மேகங்களால் கூட உன்னை தொட முடியவில்லையாம் . அழுகைக்கு தயாராகின்றன .. மழைகாற்று..நம்மை பிரிக்கும் சதியோ?? !!! 
மழையிலும் கரையாத உன்னை, பொறாமையோடு பார்கின்றன நட்சத்திரங்கள்...
கவலைகளால் துவண்டு விட்டிருந்த என்னை, கவிஞானாக்கி அழகு பார்த்தாய்...
என்னவள் எனை நீங்கினாலும், உன் கனிவு முகம் என்னை கலங்க விட வில்லை ...
நமக்குள் இருக்கும் தூரம் .. வெறும் கண்களுக்கும் நெஞ்சுக்கும் உள்ள தொலைவு தான் ..!!!
பிரிந்தாலும் பதினைந்து நாட்களில் என்னை சேரும் உன் அன்பினை எண்ணி வியப்பில் நான் !!!
நிலவே!!! என் கவலைகளின் மருந்தாகிவிட்ட  உன்னை நிரந்தரமாக அடையும்  நாள் என்றோ ???!!
 

14 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Infusing linguistic patriotism while preserving tamil its deserved share of honor and credibility.Enjoyable flow :)

    ReplyDelete
  3. Deepak, Deliberately used this adjectives ??? Slightly Provocative??

    ReplyDelete
  4. good work da, try to find a musician who can compose, it will be more excellent with a song :)

    ReplyDelete
  5. Hey gud one :)Keep posting more :)

    ReplyDelete
  6. very nice!!
    //
    கண்ணாமூச்சி ஆடும் மேகங்களால் கூட உன்னை தொட முடியவில்லையாம் . அழுகைக்கு தயாராகின்றன .. மழைகாற்று..நம்மை பிரிக்கும் சதியோ?? !!!
    மழையிலும் கரையாத உன்னை, பொறாமையோடு பார்கின்றன நட்சத்திரங்கள்...
    //
    Beautiful lines!!

    ReplyDelete
  7. oh my god! too much :) :) excellent!! no words to describe!!!!!

    ReplyDelete
  8. Fantastic one....Keep writing...!! :)

    ReplyDelete
  9. wow.. nice vaibahv... good work... :) :)
    ! என் கவலைகளின் மருந்தாகிவிட்ட உன்னை நிரந்தரமாக அடையும் நாள் என்றோ ???.. great and sensible lines :) also good pic :):)

    ReplyDelete
  10. hey romba azhagaana kavithai :) ivlo miss pannitaenae nu irku :)
    **அமாவாசைகளை நான் வெறுத்தேன்.. பிரிவின் தாக்கம் !!!
    காத்திருந்தேன் பாதித் திங்கள் ... முழுதாய் உனைக் காண ஏக்கம் !!! ** osssssssssum lines :)

    ReplyDelete